யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 39 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கமைய யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 39 மீனவர்களும் இன்று மதியம் ஊர்காவற்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டு இந்திய துணைத்தூதகரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரும் விடுதலை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.