85 சதவீத விமானங்களை இயக்கலாம் – விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி

175 0

கொரோனா பரவல் எதிரொலியாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது.

கொரோனா முதல் அலை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கொரோனா காலத்துக்கு முன்பு விமான நிறுவனங்கள் இயக்கியதில் 72 சதவீத உள்நாட்டு விமானங்களை மட்டும் இயக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 12-ந் தேதியில் இருந்து இந்த உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், அதிகபட்சமாக 85 சதவீத உள்நாட்டு விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த உத்தரவை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்துள்ளது.