ஊதியத்தின் அடிப்படையில் தான் எச்-1 பி விசா என்ற புதிய முறையைக் கொண்டு வந்தார் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்.
இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கிப் பணிபுரிவதற்கு அந்த நாடு எச்-1பி விசா வழங்கி வருகிறது. இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்த விசா முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற வகையில் குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. இந்த விசாவைத்தான் வெளிநாட்டினரை பணியாற்ற அமெரிக்க நிறுவனங்கள் நம்பி உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் 65 ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. மேலும், அந்த நாட்டில் உயர்படிப்பு படித்த வெளிநாட்டினர் 20 ஆயிரம் பேருக்கும் இந்த விசா தரப்படுகிறது.