தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை(காணொளி)

349 0

41தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது நடாத்தி வருகின்றனர்.

கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2016ஆம் ஆண்டின் இறுதிக்குள் தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் வழங்கப்படும் என கடந்த ஆண்டு கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியளித்திருந்தார்.

எனினும், தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரது உறுதிமொழிக்கு அமைய கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை.

இதன்படி, தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்களை நடாத்த வேண்டும் என தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் வலியுறுத்தியினர்.

இதற்கமையவே கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.