வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலத்தின் பிரதான மண்டபம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது வித்தியால அதிபர் கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில், விருந்தினர்கள் பாண்ட் வாத்தியங்கள் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ராதாகிருஸ்ணன், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராசா, மற்றும் ஆசிரியர் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.