நல்லாட்சியை தோற்கடிக்க ஜே.வி.பி தயார்!

286 0

jvp-640x400நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவரவுள்ள அழிவை ஏற்படுத்தும் பொருளாதார கொள்கையை தோற்கடிக்க தாம் தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் அரச வளங்களை விற்பனை செய்தால் புதிய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு அந்தஸ்துள்ள சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கம் எண்ணியதை செய்யும் சட்டத்தை உருவாக்கி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.