கூட்டு எதிர்க் கட்சியினர் ஊடகங்கள் மூலமாக ஆட்சியை கவிழ்க்க முயற்சி

289 0

ranil-1கூட்டு எதிர்க் கட்சியினர் ஊடகங்கள் மூலமாக ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

களனி வராகொடை பிரதேசத்தில் இன்று(06) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு மூன்று வாரங்களில் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தனர். மக்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கவில்லை. எதிர்க் கட்சியினர் ஊடகங்களில் அரசுக்கு எதிராக சில விடயங்களை பெருப்பித்து காட்டி எமது அரசாங்கத்தை கவிழ்க்க நினைத்தனர்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற பின்னர் தமக்கு கிடைக்க போகும் தகவல்கள் என்ன என்பதை அறிய சில ஊடகங்களும் அதன் ஆசிரியர்களும் தயாராக இருக்கின்றனர்.இவை அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.