இன்று முதல் 08 மணித்தியாலங்கள் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும்

259 0

katunayake-image-1கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06ம் திகதி வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விமான நிலையத்தின் ஓடுபாதையின் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

குறித்த காலப்பகுதியில் விமான போக்குவரத்து முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் விஷேட போக்குவரத்து முறை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏப்ரல் மாதம் 06ம் திகதி வரை ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3.00 மணி முதல் மறுநாள் காலை 09.00 மணி வரை விஷேட போக்குவரத்து முறை பேணப்படும் என்று பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.