குடிநீர் வேலைத்திட்டங்களுக்காக 300 பில்லியன் ரூபா முதலீடு

262 0

2059229926hakeemஇந்த ஆண்டிற்குள் குடிநீர் வேலைத்திட்டங்களுக்காக 300 பில்லியன் ரூபா முதலீடு செய்வதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

ஐந்து பாரிய வேலைத் திட்டங்களுக்காக கடந்த வாரம் இந்த நிதித் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 150 பில்லியன் ரூபா பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களில் உள்ள சிறுநீரக நோயாளர்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பாரிய குடிநீர் திட்டங்கள் அதிகமானவற்றுக்கு இவ்வளவு தொகை நிதி ஒதுக்கப்பட்டிருப்பது முதலாவது தடவை என்றும், இந்த ஆண்டிற்கு குடிநீர் புரட்சி ஒன்றை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.

களுகங்கை நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.