அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் ஜகத் வெள்ளவத்த இணைய வழி மூலம் இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் உரையாற்றிய பேச்சு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அவர் தனது புதிய நியமனம் மற்றும் அதன் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வது தொடர்பாக எழுந்துள்ள சூழ்நிலை குறித்தும் அங்கு விளக்குகிறார்.
“உண்மையில், மேதகு ஜனாதிபதி என்னைக் கடந்த ஜூலை 7 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமித்தார்.
நாட்டில் துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக அவுஸ்திரேலியா செல்ல முடியாமல் தடை ஏற்பட்டது. அவுஸ்திரேலி யாவுக்கான பயணத்திற்கு என்னால் தயாராக முடியவில்லை. எப்படியும் தற்போது எல்லாம் சரியாகிவிட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் திட்டத்தை முன்னெடுப்பேன்.
நான் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் என் வீட்டில் கடுமையாக உழைத்தேன். நான் சில பெரும் தொழிலதிபர்களைச் சந்தித்தேன். ” என அவர் தெரிவித்துள்ளார்.