மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமன்த குமார எனப்படும் வெலே சுதாவின் தாயும் உறவுக்கார சகோதரர் ஒருவரும் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலால் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வௌ்ளவத்தை பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.
அவர்களிடமிருந்து 20 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் இருவரும் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கலால் திணைக்களம் கூறியுள்ளது.
ஹெரோயினை வைத்திருந்தமை தொடர்பில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக இணங்காணப்பட்ட வெலே சுதாவிற்கு கடந்த ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.