பிலிப்பைன்சில் 23 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

187 0

பிலிப்பைன்சில் மேலும் 21,261 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா-வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், பிலிப்பைன்சில் நேற்று மேலும் 21,261 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிலிப்பைன்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 23 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மேலும் 277 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 20.90 லட்சத்துக்கும் அதிகமானோர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிலிப்பைன்ஸ் 19-வது இடத்தில் உள்ளது.