தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுமா?

195 0

கொவிட் நிலமை காரணமாக தற்போது அமலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (17) தீர்மானிக்கப்படவுள்ளது.

அதற்காக ஜனாதிபதி தலைமையில் கொவிட் தடுப்பு விஷேட குழு இன்று மாலை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமாயின் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வௌியிடுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.