மேல் மாகாணத்தின் முக்கியமான மரதகஹமுல அரிசிச் சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர் கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து அரிசி உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு கடினம் என்பதால் இந்த நிலைமை ஏற்பட் டுள்ளது என அந்தச் சங்கத்தின் தலைவர் பி. கே. ரஞ்ஜித் கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மரதகஹமுல அரிசி ஆலைகளில் தற்போது அரிசி உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரதகஹமுல அரிசிச் சந்தையில் தற்போது அரிசி விலைக்குப் பெற்றுக் கொள்வதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த நாட்களில் தொடர்ச்சியாக அரிசி தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்கவேண்டி இருக்கும் அவர் தெரிவித்துள்ளார்.