எழுக தமிழ் எழுச்சிப் பேரணி – மட்டக்களப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி

289 0

dsc_1092-711903“ஜெனிவாவில் எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் பேரவையில் நமது பிரச்சினைகளில் காட்டப்படுகின்ற அக்கறை நீர்த்துப் போகாமலும் அதனுடைய கூர்மை மழுங்கிப் போகாமலும் இருப்பதற்காக குரல் எழுப்ப வேண்டியது தங்களது கடமை என வட, கிழக்கு மக்கள் நினைக்கின்றார்கள்” என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ் 2017” தொடர்பில் நேற்று (5) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மட்டக்களப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்தார்.