இலங்கையின் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும்

226 0
வருட இறுதியில் இலங்கையின் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளை நேற்றைய தினம் (15) ஆரம்பித்ததன் பின்னர் அவர் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இதுதொடர்பாக பதிவு செய்துள்ளார்.

குறித்த பதிவில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 2021 ஆண்டு அரையாண்டில் 12 .3 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தொற்று நோய் தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி மற்றும் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 5 சதவீதம் யதார்த்தமாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.