14ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்

453 0

மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது. (1048Km)
தமிழர்களின் தேசம் விடுதலை பெற நல்லூர் முன்றலில் 12 நாட்கள் அறவழியில் உண்ணா நோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணா அவர்களின் முதலாவது விடுதலை வேள்வி நாளின் நினைவு சுமந்து  15/09/2021 காலை அகவணக்கத்தோடு மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பமானது.

தொடர்ந்த பயணத்தில் Issenheim , Cernay, Mulhouse, Saint- Louis போன்ற மாநகரசபையில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமீழத்தின் சுதந்திரமே தமிழருக்கான உறுதியான தீர்வு என்பதனை வேண்டி கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது. சம நேரத்தில் மாநகரசபைகள் தமது முகநூல் பக்கங்களிலும் இடைகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்த பயணம் சுவிசு நாட்டினுள் எழுச்சிகரமான வரவேற்போடு உள் நுழைந்து Liestal மாநகரம் நோக்கி பயணிக்கின்றது. நாளை காலை 9.30 மணியளவில் Liestal மாநகரசபை முன்றலிலில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் தொடரும்.

விடுதலைப்பயணம் தொடரும்..

“நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது”

– தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.