நாட்டின் மக்கள் தொகையில் 50% தடுப்பூசி போடப்பட்டது: சுகாதார அமைச்சர்

200 0
நாட்டின் 50% மக்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது ஒரு பாரிய வெற்றியாகும். கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தில் உலகில் முன்னணியில் இருக்கும் ஒரு நாடாக நாம் தாழ்மையுடன் மகிழ்ச்சியடையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறப்புக்களை குறைப்பதற்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.
நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் இலங்கை ஒரு நாடாக முன்னேற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.