சுற்றுச்சூழல் அமைச்சானது பொது மக்களுக்கு பழம் தரும் மரங்கள் மற்றும் பிற மரக்கன்றுகளை இலவசமாக வழங்கவுள்ளது.
கொரோனா நெருக்கடியால் விவசாயிகளும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏனையவர்களும் சிரமங்களை எதிர்கொள்வதால், அவர்களிடமிருந்து மரக்கன்றுகளை கொள்வனவுச் செய்து மீண்டும் பொது மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேற்படி திட்டத்திற்காக 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டின் மர அடர்த்தியை அதிகரிக்க முடியும் அத்துடன் மர வளர்ப்பை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெறுமதியான பழங்கள் மற்றும் மர கன்றுகளை விநியோகிப்பதன் மூலம் இது நாட்டிற்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் என அவர் தெரிவித்தார்.