தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பவே திமுக அரசு சோதனை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
* உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்நோக்கத்துடன் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
* அதிமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே சோதனை நடத்தப்படுகிறது.
* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்ப திமுக அரசு சோதனை நடத்துகிறது.
* லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.