இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றமே அமைக்கப்படவேண்டுமென்ற நிலைப்பாட்டையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக ஐநா மீண்டும் அறிவித்துள்ளது.
அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றத்துக்கு தெளிவாக ஆதரவு தெரிவித்துள்ள செயிட் அல் ஹூசைன், நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையையும் அவர் வரவேற்றுள்ளதாக ஐநா சபையின் ருவிற்றர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லையெனவும், அது தொடர்பாக சிறீலங்கா ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பையடுத்தே ஐநாவினால் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.