தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் பரிசு பொருட்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் 2-ம் கட்ட விசாரணை

316 0

201701060333015131_netanyahu-questioned-for-second-time-in-graft-probe_secvpfதொழிலதிபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பரிசுப் பொருட்கள் பெற்ற விவகாரத்தில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டது.

இஸ்ரேலிய நாட்டு பிரதம மந்திரியாக இருப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. பிரதமர் பெஞ்சமின் தொழிலதிபர்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் அவிச்சை மண்டெல்பிலிட் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. பரிசுப் பொருள் பெற்ற விவகாரத்தில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் இஸ்ரேல் அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் பெஞ்சமினை பதவி விலகுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.முன்னதாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்களை பிரதமர் பெஞ்சமின் மறுத்து உள்ளார்.