சதொச களஞ்சிய சாலையில் இருந்த சுமார் 56,000 கிலோ வெள்ளைப்பூடு வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து ஆராய்ந்து வரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு அரசியல் அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஊழல் மற்றும் விரயமாக்குவதை தடுப்பதற்காகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஒப்புதலுடன் தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும், தன்னை பதவியிலிருந்து அவர் நீக்கும் வரை தான் இராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையால் வெள்ளைப் பூடு மோசடி அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் இதன்போது அமைச்சரவை அனுமதியுடன் சதொச கூட்டுறவு நிறுவனத்துக்கு வெள்ளைப் பூண்டு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தனியார் நிறுவனத்துக்கு அது விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்டு மூன்றாம் தரப்பினருக்கு விற் பனை செய்வது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.