வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் துமிந்த சில்வா!

225 0

மரணதண்டனைக் கைதியாக இருந்து பொதுமன்னிப்பில் விடுதலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு சென்றுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2012ஆம் ஆண்டு கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் சக கட்சி உறுப்பினர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் அமைச்சர் பாரத லக்ஸ்மன் கொல்லப்பட்டார். படுகாயமடைந்த துமிந்த சில்வா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில், நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சில மாதங்களுக்கு முன்னர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தார்.

பின்னர் அவருக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.