விழுப்புரம் மாவட்டத்தில் 6,097 உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்ட தேர்தல்

188 0

முதல் கட்டமாக செஞ்சி, திருவெண்ணைநல்லூர், கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 யூனியன்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.

இதற்கான மனுதாக்கல் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய வருகிற 22-ந்தேதி கடைசி நாளாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட கவுன்சிலர்கள், 293 யூனியன் கவுன்சிலர்கள், 699 பஞ்சாயத்து தலைவர்கள், 5088 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என 6097 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக செஞ்சி, திருவெண்ணைநல்லூர், கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 யூனியன்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

2-ம் கட்டமாக வல்லம், கோலியனூர், காணை, மேல்மலையனூர், மரக்காணம், மயிலம் ஆகிய 6 யூனியன்களுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் 13,83,687 பேர் வாக்களிக்கின்றனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 6,87,420 பேர். பெண் வாக்காளர்கள் 6,96,115 பேர். மூன்றாம் பாலினத்தவர் 182 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் செய்து வருகிறார்கள். பாதுகாப்பு பணிக்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.