தலைகீழாக நின்று தீர்மானம் கொண்டு வந்தாலும் எதுவும் செய்ய முடியாது: அண்ணாமலை

222 0

தைரியம் இருந்தால் நீட் விவகாரத்தில் 2006-15 ஆம் ஆண்டு வரை நீட்டிற்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள்? என்பதை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

2010-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. இருந்தது. நீட்டை தமிழக மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள்.

தைரியம் இருந்தால் நீட் விவகாரத்தில் 2006-15 ஆம் ஆண்டு வரை நீட்டிற்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள்? என்பதை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்.

நீட்டை காங்கிரஸ்-தி.மு.க. கொண்டு வந்தாலும் அது ஏழை மாணவர்களுக்கும், தமிழக மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது கிடையாது என்பது பா.ஜ.க.வின் கொள்கை ஆகும்.

தலைகீழாக நின்று தீர்மானம் கொண்டு வந்தாலும் நீட், 3 விவசாய சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டத்தில் தி.மு.க. அரசால் எதுவும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.