விமானங்கள் வராத விமான நிலையங்களையோ கப்பல்கள் அற்ற துறைமுகங்களையோ ஹம்பாந்தோட்டை மக்கள் கோரவில்லை என, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் கோரியதெல்லாம் தொழில் வாய்ப்பு மற்றும் வறட்சிக்கு தண்ணீர் மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேச அபிவிருத்தி தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேச அபிவிருத்திக்கு ராஜபக்ஷக்களால் பாரிய கடன் பெறப்பட்டதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
வழங்கிய கடன் முடிவதற்கு சில காலங்களே இருந்த நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றதாகவும், தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் அந்தக் கடனை செலுத்த வேண்டியது மக்களே எனவும் அகில விராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நாங்கள் அரசாங்கம் என்ற வகையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்தோம். எங்களுக்கு மக்கள் மீது சுமையை சுமத்த விருப்பமில்லை. எனவே புத்திசாலித்தனமாக நாங்க சீனாவுடன் இணங்கினோம். குத்தகை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவே நாம் தீர்மானித்தோம்.
இது இலாபமானதே, கப்பல் வராத துறைமுகத்திற்கு கப்பல்கள் வரப் போகின்றன. மத்தள விமான நிலையத்தை விமானங்களால் நிறப்ப முடியும். வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்,
ராஜபக்ஷக்களுக்கு அச்சம் உள்ளது. இது நடந்தால் அவர்களது பலம் இல்லாமல் போகும் என்று. பின்னர் மக்களுக்கு அவர்கள் தேவையில்லை, என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.