சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் கைது(காணொளி)

544 0

indian-meenaசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் இரண்டு படகுகளில் மூலம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அளவி எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ள நிலையிலேயே, குறித்த 10 மீனவர்களும் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.