தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற கழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழகத்தில் கடந்த 10 வருடங்களில் நடைபெறாத சந்திப்பு ஒன்று நேற்று மாலை சென்னைத் தலைமமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற கழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
சந்திப்பின்போது, தமிழகத்தில் நிலவும் வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சுமார் 25 நிமிடங்கள் இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையிலான சந்திப்பின் மூலம் தமிழக அரசியல் கலாச்சாரத்தில் மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக, தமிழக அரசியலில், முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்து மாநில பிரச்னைகள் குறித்து பேசவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.