வடக்கு ஈராக்கின் மொசூலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடி வரும் ஈராக் இராணுவத்தினருக்கு உதவும் வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈராக் படையினருக்கு உதவும் பெரும்பாலான இராணுவ ஆலோசகர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மொசூல் நகரை மீட்டெடுக்க நடந்து வரும் போரில் தாங்கள் புதிய உத்திகளை கையாளப் போவதாக அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.