மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடசாலைகளில் பெறுபேறுகளை உயர்த்துவதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்- தர்தலிங்கம் சித்தார்த்தன்(காணொளி)

296 0

nirயாழ்ப்பாணம் நீர்வேலி கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் வேலுப்பிள்ளை மண்டப திறப்பு விழாவும், பரிசில் தின நிகழ்வும் இன்று நடைபெற்றது.

பாடசாலையின் முதல்வர் தி.இரவீந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, பாடசாலையின் மறைந்த முன்னாள் அதிபர் வேலுப்பிள்ளையின் ஞாபகார்த்த மண்டபம் பாராளுமன்ற உறுப்பினர் தர்தலிங்கம் சித்தார்த்தன், பாடசாலையின் அதிபர், கோப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு, ஆசியுரை இடம்பெற்றது

ஆசியுரையினை நீர்வேலி செல்வக்கதிர்காம தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ கு.தியாகராஜ குருக்கள் நிகழ்த்தினார்.

பரிசில் நிகழ்வில் 2016ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள், மற்றும் பாடரீதியாக அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் நா.சிவநேசன், யாழ்ப்பாண போதனா லைத்தியசாலையின் வைத்திய கலாநிதிகளான வி.விபுலன், திருமதி வி.மகிழினி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் கௌரவ விருந்தினர்களான இலங்கை வங்கியின் நீர்வேலி கிளை ஓய்வு நிலை முகாமையாளர் ஆ.இராசநாயகம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் எஸ்.லலீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடசாலைகளில் பெறுபேறுகளை உயர்த்துவதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

அயல்பாடசாலை சிறந்த பாடசாலையாக உருவாக்குவதன் மூலமே அக்கிராமத்திலுள்ள சிறார்களுக்கு சிறந்த கல்வியை வழங்க முடியும் இதற்கேற்ப ஆசிரியர்கள் குறைந்த மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமாயின் பாடசாலைகளின் பெறுபேறுகளை உயர்த்திக் கொடுக்கும் போது அக்கிராமத்து சிறார்கள் பாடசாலையை நாடிவருகின்ற நிலைமையை எற்படுத்த முடியும் என்றார்.

முன்னைய காலத்தில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பது கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கான பரீட்சையாக காணப்பட்டது.

ஆனால் தற்போது ஒரு போட்டிப்பரீட்சையாக மாறிய நிலை காணப்படுகின்றது எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.