சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

287 0

timthumbநாட்டிற்குள் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரி ஏய்ப்புச் செய்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் ஒருதொகை சிகரெட்டுக்களுடன் மினுவன்கொட பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் வசம் இருந்து 1500 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மினுவன்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.