மாலைதீவு கடற்படையினரால் இரு மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்

298 0

7447_da8e1356d1e1f10d06f492e4fc5fa6bb5885fc893c05676869df78a7528a568eகிழக்கு மாகாணத்தில் இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணாமல்போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர் கிழக்கு மாகாணத்தில்  இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணாமல்போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர், படகு ஒன்றுடன் மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மாலைதீவு துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் இருவரும் தமது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இன்று இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற படகுகள் இரண்டும் வழமைக்கு மாறாக திசை மாறி மாலைதீவு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது படகுகளில் இருந்த எரிபொருள் முடிவடைந்ததால் கடற்காற்றினால் இரு படகுகளும் நகர்ந்து சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவ்வழியால் வந்து கொண்டிருந்த மாலைதீவு கடற்படையினர் ஒரு படகையே அவதானித்ததாகவும், அவர்கள் அப்படகை மாலைதீவு துறைமுகத்திற்கு கட்டி இழுத்துச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படகில் மூன்று மீனவர்கள் சென்ற போதிலும் நடுக்கடலுக்கு அப்பால் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றைய படகிலுள்ள மீனவர்களுக்கு உதவுவதற்காக மீனவர் ஒருவர் மற்றைய படகில் ஏறியதாகவும், பின்னர் அப்படகு வேறு திசை நோக்கி நகர்ந்து சென்று விட்டதாகவும் மீட்கப்பட்ட படகில் இருந்த இரு மீனவர்களும் தெரிவித்துள்ளனர்.