அங்கோடை – களனிமுல்லை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

285 0

adfaf2அங்கோடை – களனிமுல்லை பகுதியில் பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் களனிமுல்லையில் இருந்து அங்கோடை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக தெரியவந்துள்ளது.

இவர் பயணித்த திசைக்கு எதிர்த்திசையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு ஆயுததாரிகளே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 36 வயதுடைய சுரங்க குமார என்பவரே உயிரிழந்துள்ளதாக, அங்கோடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.