இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பட்டதாரியாகியுள்ளார். பம்பலபிட்டி வர்த்தகரான மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் உப பொலிஸ் பரிசோதகரான பீ.ஏ.லக்மினி இந்திக பமுணுசிங்கவே இவ்வாறு பட்டதாரியாகியுள்ளார்
ஸ்ரீஜயவர்தன பல்கலைக்கழகத்தில் அவர் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துக்கொண்டுள்ளார். சிறைச்சாலையிலிருந்து கல்வி பயின்று பட்டப்படிப்பு பரீட்சைக்கு தோற்றிய அவர், இன்று தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தமைக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டுள்ளார்.