கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் ஆசிரிய மத்திய நிலையம் (காணொளி)

321 0

kili-adigalகிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 28.05 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள ஆசிரிய மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் மாகாணக் கல்வி அமைச்சினால் கிளிநொச்சி கல்வி வலயத்திற்கான ஆசிரிய மத்திய நிலையம் 28.05 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பகல் 12. 05மணிக்கு நடைபெற்றுள்ளது.

இதில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் க. முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்

நிகழ்வில் அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.