நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கடும் கோபமும் சாபமும்

317 0

84776344_84776339அரசாங்கத்துடனே தனக்கு கோபம் உள்ளது. மற்றபடி சர்வதேச சமூகத்துடனோ அல்லது சீனாவுடனோ எந்தவித கோபமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் இணைப்பு அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்பு, நாட்டின் எதிர்காலம் தொடர்பில் கொள்கையற்ற நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கடும் கோபமும் சாபமும் காணப்படுகின்றது.

தவிர , சீனா உள்ளிட்ட எந்தவொரு வெளிநாட்டுடனும் தமக்கு பிரச்சினையில்லை. புத்தாண்டில் பணிகளை சிறப்பாக ஆரம்பித்துள்ளோம் இலங்கைக்கு இது முக்கியமான வருடமாகும்.

எவ்வாறாயினும், ஜனநாயக ரீதியில் ஆட்சியை கவிழ்ப்போம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.