16 இல் மத்திய வங்கி ஆளுநராகும் கப்ரால்!

176 0

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து எதிர்வரும் 14 ஆம் திகதி தாம் விலகுவதாக பேராசிரியர் டப்ளியூ.டி. லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார். கடந்த 2019 டிசம்பர் 24 ஆம் திகதி முதல் மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக பேராசிரியர் டப்ளியூ.டி. லக்‌ஷ்மன் பதவி வகித்து வரும் நிலையிலேயே அவர் இராஜினாமா செய்யவுள்ளார்.

தனது 80 ஆவது பிறந்த தினத்தன்று பதவியிலிருந்து ஓய்வுபெற தான் உத்தேசித்திருந்தபோதும், தற்போது அதற்கு 6 வாரங்களுக்கு முன்னதாகவே பதவி விலக் தீர்மனித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பேராசிரியர் டப்ளியூ.டி. லக்‌ஷ்மன் இராஜினாமா செய்ததும் ஏற்படும் மத்திய வங்கி ஆளுநர் பதவி வெற்றிடத்துக்கு தற்போதைய நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் 16 ஆம் திகதி நியமிக்கவுள்ளதாக தெரிய வருகிறது. அதற்கு முன்னர் அவர் அவரது இராஜாங்க அமைச்சு பதவியையும் எம்.பி., பதவியையும் இராஜினாமா செய்யவுள்ளார்.