மரண தண்டனை கைதி சிறப்பு அம்பியூலன்ஸ் மூலம் நீதிமன்றில்!

293 0

duminda-415x260மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் (05) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்வதற்காக சிறப்பு அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், துமிந்த சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகள் தொடர்பிலேயே அவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சொத்துக்கள் தொடர்பான விபரங்களை கடந்த 3 வருடங்களாக சமர்பிக்க தவறியமை காரணமாகவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.