உதயங்க வீரதுங்கவின் 16 வங்கிக் கணக்குகள் முடக்கம்

275 0

uthayngaரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் 16 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன 16 வங்கிக் கணக்குகளை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

2006ம் ஆண்டில் உக்ரேய்னிலிருந்து விமானம் கொள்வனவு செய்ததில் பாரியளவு அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக உதயங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மிக் 27 ரக விமானங்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டு தனியார் வங்கிகளில் 16 வங்கிக் கணக்குகளில் சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.