சீன நிறுவனத்துடனான உடன்படிக்கைக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு!

284 0

chinaஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி இன்று இலஞ்ச ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த முறைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன உட்பட சிலர் செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதன் ஊடாக இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 330 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த கொடுக்கல் வாங்கல் மூலம் பிரதமரின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மலிக் சமரவிக்ரம உட்பட மூன்று பேருக்கு எதிராகவும் இன்று இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் ஆலோசகர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர் ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 330 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.