விழிப்புணர்வு பேரணியை ஆரம்பித்தது ஜே.வி.பி!

267 0

jvpகொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக துண்டுப் பிரசுர விநியோகமும் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றும் ஜே.வி.பி கட்சினரால் நேற்று(04) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

99 வருடங்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

எதிர்காலத்தில் கொழும்புத் துறைமுகத்தையும் விற்கக் கூடிய சூழ்நிலை உருவாகக் கூடும் என்று வலியுறுத்தியே இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு பிராதான கனிய வளங்களையும் சீனாவுக்கு விற்பனை செய்யக் கூடிய வேலை திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில்,மக்கள் குறித்த திட்டம் தொடர்பில் விழிப்படைய வேண்டும்,அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே துண்டுப் பிரசுர விநியோகமும் விழிப்புணர்வு கூட்டமும் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, விஜித்த ஹேரத் மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை,ஜே.வி.பியினால் இந்த வருடத்தில் முன்னெடுக்கப்படும் முதலாவது விழிப்புணர்வு பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.