அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் அவை சபாநாயகராக பால் ரியான் மீண்டும் தேர்வு

307 0

201701041139338779_paul-ryan-re-elected-as-us-house-of-representatives-speaker_secvpfஅமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கான சபாநாயகராக பால் ரியான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்க பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலிலும் குடியரசு கட்சி வேட்பாளர்களே பெருமளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர். பாராளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் தற்போதைய சபாநாயகரான ஜனநாயக கட்சியை சேர்ந்த பால் ரியான் மற்றும் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் போட்டியிட்டனர்.

இவர்களில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் பால் ரியான் 249 வாக்குகளையும், நான்சி பெலோசி 189 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து, பால் ரியான் மீண்டும் சபாநாயகரானார்.