ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செப். 30 வரை நீட்டிப்பு

201 0

ஜப்பானில் தற்போது அமலில் இருக்கும் அவசர நிலையானது வரும் 12-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

ஜப்பானில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது அமலில் இருக்கும் அவசர நிலையானது, வரும் 12-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் 18 இதர பகுதிகளில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் செப்டம்பர் இறுதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் ஜப்பானின் ஒகினாவா பகுதியில் அறிவிக்கப்பட்ட கொரோனா கால ஊரடங்கு படிப்படியாக பல பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, ஜப்பான் பிரதமர் கூறுகையில், கொரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை. எனவே, மக்கள் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.