இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன் தனது பதவியை இராஜிநாமா செய்வதற்குத் தயாராக இருப்பதாக அறிய வருகிறது.
மத்திய வங்கி ஆளுநரின் இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
பேராசிரியர் லக்ஷ்மன் பதவியிலிருந்து விலகிய பின் ஒரு முன்னணி நிறுவனத்தின் உயர் பதவியில் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.