
மேன்முறையீடு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கலாமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
இந்த கொடுப்பனவுக்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 46 ஆயிரத்தி 581 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறைந்த வருமானமுடைய வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள், சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் மற்றும் நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள் ,சமுர்த்தி நிவாரணம் பெறாத ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்கள் ஆகியோர் இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.