தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி சுற்றுலா விடுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனை செய்த சம்பவமொன்று மட்டக்களப்பு கல்லடியில் இடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
நேற்றிரவு 11.30 மணியளவில் கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பண்டார தலைமையிலான காவற்துறை அதிகாரிகள் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின்போது மட்டக்களப்பு வாவியூடாக படகுகளின் மூலம் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனை இடம் பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில் குறித்த சுற்றுலா விடுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் விற்பன செய்யப்பட்ட 73 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.