கனடாவில் இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி சர்வதேச மாநாட்டிற்கு வடக்கு, கிழக்கிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
சர்வதேச மாநாடு தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு வழங்கி செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.
வடக்கு சுகாதார அமைச்சர், வடக்கு கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், கல்வி அமைச்சர் உட்பட வடக்கு கிழக்கிலிருந்து 20 இற்கும் மேற்பட்டவர்கள் குறித்த கனடா மாநாட்டிற்கு செல்லவுள்ளதாகவும், இம்மாநாடு இம்மாதம் 16ஆம், 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு கல்வி மற்றும் மூலோபாய திட்டங்களை நிறைவேற்றுவதற்குரிய நிதி மற்றும் ஆளணி வசதிகள் குறித்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.