கொரோனா தொற்றை அறிந்து கொள்ள அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு இடைப்பட்டதாக புதிய பரிசோதனை செய்யக்கூடிய வகையில் இயந்திரம் ஒன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விசேட சிரேஷ்ட விரிவுரையாளர் உள்ளிட்ட குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லாமவன்ஸா மற்றும் மூத்த விரிவுரையாளர் ருசிகா பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் இந்த இயந்திரத்தை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு அறிமுகப்படுத்தினர்.
இக்கருவியால் கொரோனா தொற்றளர்களை மிக விரைவாகவும் மற்றும் குறைந்த செலவிலும் அடையாளம் காணக் கூடியதாக அமைந்துள்ளது.
தற்போது குறித்த இயந்திரம் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தொழில்நுட்பக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுப் பதிவுக்காகக் காத்திருக்கிறது. RT LAMP (Reverse Transcription Loop Mediated Isothermal Amplification) எனும் விசேட பரிசோதனைக் கருவி தேசிய மற்றும் சர்வதேச காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனையை ரூபா1500க்கு செய்யலாம் என அந்தக் குழு தெரிவித்துள்ளது.