சன்சைன் சுத்தா கொலை – சந்தேகநபர் ஒருவர் கைது

222 0

சமீபத்தில் கொலை செய்யப்பட்ட ´சன்சைன் சுத்தா´ என அழைக்கப்படும் அமில பிரசன்னவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல போதைப்பொருள் கடத்தற்காரரான ´ஹரக் கட்டா´ என்று அழைக்கப்படும் பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

வெலிகம, உடுகவ பிரதேசத்தில் வைத்து அவர் இன்று (09) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.